சுவர் இடுக்கில் சித்திரம்:

மழலையர் இல்லம்உறவற்ற கூட்டம்அதுவே என் உலகம்.. பட்டும் படாத தொட்டும் தொடாத மீசையும் மண்ணும் போல.. எதிர் வீட்டு ராணி அவள்,அவ்வப்போது சுவர் இடுக்கில் அவதரிப்பாள்.. ஆதரிப்பாள்.. அங்கே வளரும் குட்டி நாய் தவ்வும், வீசிய ரொட்டித்துண்டை கவ்வும்.. தொட்டிச் செடிகள் பூத்துக் குலுங்கும், தினந் தோறும் சேரும் நீரும் அருந்தும்.. வாகனமோ பளிச்சென்று மின்னும், தினமும் காலை நீராடும்.. வாசல் தாண்டிய அன்பேவாய் பிளக்கும் படி.. படி தாண்டி உள் சென்றால் எத்தனை தானோ இன்பமடிContinue reading “சுவர் இடுக்கில் சித்திரம்:”

காட்சிப்பிழை:

ஊரெங்கும் வெப்பத்தாக்கம்.மண் வறட்டியாகி மழை வரட்டும் எனவிருக்க எப்பக்கமும் சொட்டுத்தூறல் இல்லை. அதோ ! அங்கே மட்டும் நீர்த்தேக்கம்.புதையல் கண்ட முதல் மாந்தன் நாந்தான்.மற்றவர் தூங்கித்தான் போனரோ இதைக்காணாது. பல ஆண்டுகட்கு பிறகு நீரை நேர்க்காணலே. மெதுவாக நகர்ந்து சென்றால் நீர்க்கானலே…

A question in high-school Tamil – that never got answered !!

Person A: If you see, the language of Tamil is simpler and more efficient when compared to English. ஒரு ஆங்கில வார்த்தையைப் பொருள் பிறழாமல் அதே ஓசையோடு குறைந்த எழுத்துகளில் தமிழில் வெளிப்படுத்தி விடலாம்.There are so many examples for that.For instance, take the word “Cow” in English.It has 3 letters. “C”, “o”, “w”.In Tamil, you can convey the sameContinue reading “A question in high-school Tamil – that never got answered !!”

ஓர் திகில் இரவு

கண்முன்னே நீண்ட நெடிய வளைந்து நெளிந்த பாதை,உள்ளங்கால் அடியில் முக்கிய தசை நார் கிழிந்து தொங்க,காலை சிரட்டிக் கொண்டே ரத்தம் சொட்டச்சொட்ட நகர, சில வாகனங்கள் அதி வேகத்தில் என்னைத் துரத்தி வர, திக்குத்தெரியாமல் தெற்கு வடக்காய்த் திரிய,மாயமாய் தோன்றிய வரிக்குதிரை ஒன்றின் மேல்தட்டுத்தடுமாறி ஏறி வலம் வர,அது திடீரென மாயமென மறைந்து போக, யார் கண்ணிலும் படாமல் மருகி மருகி உதவி தேட,வைத்தியர் ஒருவர் திண்ணை மேல் தெரிய,தையல்கள் போட முனைய,என்னுள் ஆயிரம் கேள்விகள் –Continue reading “ஓர் திகில் இரவு”

பாதரசம்

வெள்ளி நிறப் பாதரசம் உடல் வெப்பநிலையைச் சொல்லும் – உச்சி விழும் மழைத்துளி உன் பாதம் வரும் வேளை: அந்த வெள்ளி நிறப் பாத ரசமும் என் உடல் வெப்ப நிலையைச் சொல்லும்..

இருள் வேண்டும்

நீல மேகம் கருப்பானதால் கருவானது,கருவானாதல் உருவானது,உருவானபோதே உறவானது,நீ என்றுமே எனது. நீர் வந்து வேர் நனைக்கும் – அந்நொடிதான் என் பச்சை உடல் என்றும் நினைக்கும். பூமியை நெருங்க நெருங்க உன் தேகம் போகும் வேகம் கூடும்.புவிஈர்ப்போ இல்லை அது கைகோர்ப்போ. ஆயிரம் மைல் தாண்டி இருந்த காதல் – பல யுகங்கள் முன் ஓடி பார்த்தாலும் தொலைதூரக்காதலுக்கு நாமே முன்னோடி. ஒரு நொடியில் ஒரு காதல் சேர்ந்தாலே அலாதி இன்பம் –ஒரே நொடியில் ஒவ்வொரு துளியிலும்Continue reading “இருள் வேண்டும்”

அவள்

பலர் பள்ளிக்கூடம் சென்று படிப்பு ஏறவில்லை; அவளோ பள்ளிக்கூடப் படியே ஏறவில்லை.இருந்தும் தலை சிறந்த நூலகம் அவள்;நூல்களால் நெய்த சேலை உடுத்தியதால் …

மயிரிழையில் உயிர் தப்பினான்

எதிர்மறையாகவே எண்ணி, விதியை வெறுத்து ,உடலை உருக்கி ,கூடாகவே குறைந்து ,இளமையை இகழும் 20 வயது கிழவன் அவன் . மலை அழுத அருவி ஆறாகி ஓட , அதில் அவன் இரையாக உள் இறங்கினான். ஆற்றங்கரையில் தன்னையே கரைக்க ,அள்ளி முடிந்த கூந்தல் மிதக்க ,நினைவலைகள் அவனை அடிக்க. கூந்தலை பார்த்த படியே; “பல நண்பர்கள் மடிந்து மண்ணில் விழுந்தாலும் ஒற்றை காலில் பிடிப்புடன் நிற்பாயே ! சில நேரங்களில் உடனிருப்போர் நிறம் மாறினாலும் நீContinue reading “மயிரிழையில் உயிர் தப்பினான்”