மழலையர் இல்லம்
உறவற்ற கூட்டம்
அதுவே என் உலகம்..
பட்டும் படாத தொட்டும் தொடாத
மீசையும் மண்ணும் போல..
எதிர் வீட்டு ராணி அவள்,
அவ்வப்போது சுவர் இடுக்கில்
அவதரிப்பாள்.. ஆதரிப்பாள்..
அங்கே வளரும் குட்டி நாய் தவ்வும்,
வீசிய ரொட்டித்துண்டை கவ்வும்..
தொட்டிச் செடிகள் பூத்துக் குலுங்கும்,
தினந் தோறும் சேரும் நீரும் அருந்தும்..
வாகனமோ பளிச்சென்று மின்னும்,
தினமும் காலை நீராடும்..
வாசல் தாண்டிய அன்பே
வாய் பிளக்கும் படி..
படி தாண்டி உள் சென்றால்
எத்தனை தானோ இன்பமடி !!
என் ஆறாத காயம் அது ஆகாய நீளம்,
மாறாத சோகம் அது மயான யோகம்..
இடுக்கில் தெரிந்த முகமோ,
இடுக்கண் விலக்க வருமோ..
உன் கைகோர்த்து கை வீச காற்றே வீசும்,
காற்றெங்கும் இன்பக் கண்ணீர் வாசம் வீசும்..
வருவாயா வரம் தருவாயா ?
காலச் சக்கரம் மின்னல் வேகம் சுழலட்டும்,
நான் உன் வாசல் வந்து சேரும் வரை.
பின்பு யுகங்கள் உறையட்டும் !!
காட்சிப்பிழை:
ஊரெங்கும் வெப்பத்தாக்கம்.
மண் வறட்டியாகி மழை வரட்டும் எனவிருக்க
எப்பக்கமும் சொட்டுத்தூறல் இல்லை.
அதோ ! அங்கே மட்டும் நீர்த்தேக்கம்.
புதையல் கண்ட முதல் மாந்தன் நாந்தான்.
மற்றவர் தூங்கித்தான் போனரோ இதைக்காணாது.
பல ஆண்டுகட்கு பிறகு நீரை நேர்க்காணலே.
மெதுவாக நகர்ந்து சென்றால் நீர்க்கானலே…
The Accomplishment of an Accomplice:
In the secretive crime, there came a voluntary accomplice.
The cool sea breeze immediately erased every footprint.
None other than the two knew about their love.
No footprints on the sands of time.
A question in high-school Tamil – that never got answered !!
Person A: If you see, the language of Tamil is simpler and more efficient when compared to English. ஒரு ஆங்கில வார்த்தையைப் பொருள் பிறழாமல் அதே ஓசையோடு குறைந்த எழுத்துகளில் தமிழில் வெளிப்படுத்தி விடலாம்.There are so many examples for that.For instance, take the word “Cow” in English.It has 3 letters. “C”, “o”, “w”.In Tamil, you can convey the same meaning with the same sound using “கௌ”.It has only 1 letter “கௌ”.
Person B: Sir, but there are three letters.
Person A: “டேய் . அதான் சொல்றேன்ல .அது மூணையும் நாங்க பிரிச்சுப் பாக்கறதில்ல. அது மொத்தமா சேத்து ஒன்னு தான்”.
The Next Career Move
Sidelined on the shores, a shining conch –
Reminisces about the days when it was in the sea.
Sometimes ball-dancing in sync with the ocean.
“Oh, I got my moves, man. Such a fluid body I have –
in the midst of a massive fluid body.”
Sometimes dating a nearby coral.
“Hey, first of all – how old are you? Don’t mistake me.
This sure is also dating, as archaeologists say.”
Sometimes anchored to the granular sands of the ocean bed.
“Good to know there’s a bed made of sand.
Human moms get mad at children for soiling the bed.”
“I had my best time out there in the blue.
Moving on to my next role – as a wind instrument.
Not sure it’s worth waiting for someone to blow me away.
Until then, allowing everybody to blow into me.
Let the music begin…”
ஓர் திகில் இரவு
கண்முன்னே நீண்ட நெடிய வளைந்து நெளிந்த பாதை,
உள்ளங்கால் அடியில் முக்கிய தசை நார் கிழிந்து தொங்க,
காலை சிரட்டிக் கொண்டே ரத்தம் சொட்டச்சொட்ட நகர,
சில வாகனங்கள் அதி வேகத்தில் என்னைத் துரத்தி வர,
திக்குத்தெரியாமல் தெற்கு வடக்காய்த் திரிய,
மாயமாய் தோன்றிய வரிக்குதிரை ஒன்றின் மேல்
தட்டுத்தடுமாறி ஏறி வலம் வர,
அது திடீரென மாயமென மறைந்து போக,
யார் கண்ணிலும் படாமல் மருகி மருகி உதவி தேட,
வைத்தியர் ஒருவர் திண்ணை மேல் தெரிய,
தையல்கள் போட முனைய,
என்னுள் ஆயிரம் கேள்விகள் – தையல்கள் உதவுமா,
தசை தான் இன்னுமொரு முறை வலி தாங்குமா,
சிகிச்சைக்கு கையில் இருக்கும் சொர்ப்பக்காசு பற்றுமா.
அகம் தோன்றிய கேள்விகளை என் முகம் சொல்ல,
அவரோ என் கால் தான் காசை விட முக்கியம் என்று,
மெதுவாய் தையல் இட்டு, கடன் எழுதி வைத்துக் கொள்ள,
மருத்துவ தர்மம்தனை கடைபிடிக்க,
இரு கை கூப்பி வணங்கி விடை பெற, கடந்த நேரத்தை சரி செய்ய,
சற்றே வேகம் பிடிக்க, தசை நார் கிழிய,
உயிரே போகும் வலியில் வாய் விட்டுக்கதற…
கல்லூரி விடுதியில் உறக்கம் கலைந்த என் நண்பன் –
“டேய் என்னடா ஆச்சு? ஏன் இப்டி கத்துற ?” -என்று என்னைத்தட்டி எழுப்ப, கண் விழித்தேன்.
“ச்ச….. கனவா ??!! நெஜம் ன்னு நெனச்சு பயன்டேண்டா மச்சான்.”
“கனவா ? பயமா ? என்ன டா நடஞ்சு ?”
ஆ முதல் ஃ வரை தெள்ளத்தெளிவாக சொல்லி முடிக்க;
“ஏன்டா இப்டிலாம் ஒரு கனவு எனக்கு வரணும்? ஏன்டா ஏன்ன்ன்ன்ன்ன் ?”
நீண்ட நேரம் யோசித்த படியே – அவன் நீண்ட கூந்தலை அள்ளி முடிக்க ;
“சனியனே !! இது என்னனு நா சொல்றேன்!
நேத்து சாயங்காலம் மவுண்ட் ரோட்ல போம்போது –
உன் பழைய செருப்பு மறுபடியும் பிஞ்சு போச்சு.
பிஞ்ச செருப்ப போட்டே ரொம்ப நேரம் நடந்து போன.
அந்த பிஸி டைம்ல பிஞ்ச செருப்போட ரோடு எப்படி கிராஸ் பண்றதுனு தெரியாம முழிச்சு அப்றம் ஸிப்ரா கிராஸ்ஸிங்ல கிராஸ் பண்ண.
யாராச்சு பாத்தா அசிங்கம் ஆயிடும்னு யாருக்கும் தெரியாமசைலெண்டா அங்க இங்க பாத்த.
கிராஸ் பண்ண உடனே செருப்பு தெக்கிற ஒருத்தர் இருந்தார் .
அவர் தெக்க்கலாம்னு செருப்ப எடுத்தப்போ. நீ அவர்கிட்ட நெறய கேள்வி கேட்ட. இது ரொம்ப பழைய செருப்பு. தச்சு தச்சு இத்துப்போன செருப்பு.இன்னும் தையல் போட்டா தாங்குமா. அப்புறம் தெக்கிறதுக்கு எவ்ளோ காசு.அப்டி இப்டினு.
அவர் 5 ரூபாய் கேட்டதுக்கு 3 ருபாய் தான் இருக்குனு சொன்ன டா மூதேவி . ஏதோ அந்த மனுஷன் உன் மூஞ்சி பாத்த மூணு நாளா சோறு சாப்டாதவன் மாறி பாவமா இருக்கு – போன போதுனு ஃ பிரீயா தெச்சு குடுத்தாரு.
செருப்போட நிலைமை தெரிஞ்சும் நாதாரி நீ உடனே ஓடுனா செருப்பு பிய்யாம என்ன பண்ணும் ? ஒடன்னே பல்ல காட்டிருச்சு. திரும்ப அவர்ட போனா அந்த பிஞ்ச செருப்லே அடிப்பாருனு ரூம் கு திரும்பி வன்ட.
இது தான் உன் கனவுல பயங்கர எடிட்டிங்கோட வந்துருக்கு. போதுமா? இப்போ புரிதா ?? பைல 5 ரூபா இல்லாத நாயி 5 மணிக்கு என் தூக்கத்த கெடுக்குது !! மூடிட்டு தூங்கு !! ஹாஸ்டல் சேர்ற கியூல ஜஸ்ட் உனக்கு பின்னாடி நின்னேன் பாரு . எல்லாம் என் தலை எழுத்து.”
பாதரசம்
வெள்ளி நிறப் பாதரசம் உடல் வெப்பநிலையைச் சொல்லும் – உச்சி விழும் மழைத்துளி உன் பாதம் வரும் வேளை: அந்த
வெள்ளி நிறப் பாத ரசமும் என் உடல் வெப்ப நிலையைச் சொல்லும்..
இருள் வேண்டும்
நீல மேகம் கருப்பானதால் கருவானது,
கருவானாதல் உருவானது,
உருவானபோதே உறவானது,
நீ என்றுமே எனது.
நீர் வந்து வேர் நனைக்கும் – அந்நொடி
தான் என் பச்சை உடல் என்றும் நினைக்கும்.
பூமியை நெருங்க நெருங்க உன் தேகம்
போகும் வேகம் கூடும்.
புவிஈர்ப்போ இல்லை
அது கைகோர்ப்போ.
ஆயிரம் மைல் தாண்டி இருந்த காதல் –
பல யுகங்கள் முன் ஓடி பார்த்தாலும்
தொலைதூரக்காதலுக்கு நாமே முன்னோடி.
ஒரு நொடியில் ஒரு காதல் சேர்ந்தாலே அலாதி இன்பம் –
ஒரே நொடியில் ஒவ்வொரு துளியிலும் ஒவ்வொரு காதல் இணைந்தால் – அதை விவரிக்க என் மொழியிலும் ஏன் எம்மொழியிலுமே வார்த்தை இல்லை.
அனைவரும் கூடி பிரார்த்திப்போம்.
வாழ்வில் ஒளி வேண்டும் என்றல்ல –
வானில் இருள் வேண்டும் என்று.
அன்பின் அருள் வேண்டும் என்று.
நீலமேகம் கருப்பாகும்..
அவள்
பலர் பள்ளிக்கூடம் சென்று படிப்பு ஏறவில்லை;
அவளோ பள்ளிக்கூடப் படியே ஏறவில்லை.
இருந்தும் தலை சிறந்த நூலகம் அவள்;
நூல்களால் நெய்த சேலை உடுத்தியதால் …
மயிரிழையில் உயிர் தப்பினான்
எதிர்மறையாகவே எண்ணி,
விதியை வெறுத்து ,
உடலை உருக்கி ,
கூடாகவே குறைந்து ,
இளமையை இகழும்
20 வயது கிழவன் அவன் .
மலை அழுத அருவி ஆறாகி ஓட , அதில்
அவன் இரையாக உள் இறங்கினான்.
ஆற்றங்கரையில் தன்னையே கரைக்க ,
அள்ளி முடிந்த கூந்தல் மிதக்க ,
நினைவலைகள் அவனை அடிக்க.
கூந்தலை பார்த்த படியே;
“பல நண்பர்கள் மடிந்து மண்ணில் விழுந்தாலும்
ஒற்றை காலில் பிடிப்புடன் நிற்பாயே !
சில நேரங்களில் உடனிருப்போர் நிறம் மாறினாலும்
நீ மாறாமல் எதிர்ப்பு தெரிவிப்பாயே !
வெட்ட வெட்ட மடிந்து போகாமல்
கரு கரு வென்று வளர்வாயே !
உயரச்சென்றாலும் வேர் மறக்காமல்
அடக்கம் காப்பாயே !
வளைந்து கொடுத்தால் தான் வளர்ச்சி
என்று வளைந்து நெளிந்து இருப்பாயே !
இத்தனை வாழ்க்கைப்பாடம் சொல்லி
ஊக்கு விற்கும் என்னை ஊக்குவித்தாயே !
நீரோடையில் நீர் ஓடையில்
நீர் போல் என் மனம் தெளிந்தேன்”.
புத்துணர்ச்சியோடு மனக் கறை நீங்கி
ஆற்றங்கரையில் வலது கால் எடுத்து வைத்தான்.