நீல மேகம் கருப்பானதால் கருவானது,
கருவானாதல் உருவானது,
உருவானபோதே உறவானது,
நீ என்றுமே எனது.
நீர் வந்து வேர் நனைக்கும் – அந்நொடி
தான் என் பச்சை உடல் என்றும் நினைக்கும்.
பூமியை நெருங்க நெருங்க உன் தேகம்
போகும் வேகம் கூடும்.
புவிஈர்ப்போ இல்லை
அது கைகோர்ப்போ.
ஆயிரம் மைல் தாண்டி இருந்த காதல் –
பல யுகங்கள் முன் ஓடி பார்த்தாலும்
தொலைதூரக்காதலுக்கு நாமே முன்னோடி.
ஒரு நொடியில் ஒரு காதல் சேர்ந்தாலே அலாதி இன்பம் –
ஒரே நொடியில் ஒவ்வொரு துளியிலும் ஒவ்வொரு காதல் இணைந்தால் – அதை விவரிக்க என் மொழியிலும் ஏன் எம்மொழியிலுமே வார்த்தை இல்லை.
அனைவரும் கூடி பிரார்த்திப்போம்.
வாழ்வில் ஒளி வேண்டும் என்றல்ல –
வானில் இருள் வேண்டும் என்று.
அன்பின் அருள் வேண்டும் என்று.
நீலமேகம் கருப்பாகும்..