கண்ணகியின் ஏவலே

இரு கல் உரசி தான் நீ பிறந்தாய் என்பது வரலாறு –

இரு கண் உரசியும் நீ வருகிறாய் அது வயசுக்கோளாறு.

எட்டாச் சூரியனாய் பூமிக்கே விளக்கேற்றும் நீ –

எட்டும் தீபமாய் வீட்டிற்கும் விளக்கேற்றுகிறாய்.

மக்கள் விரதம் கழிக்க விறகை எரிக்க எரிபொருள் எரிக்கிறாய்

அம் மக்களே களித்து வாழ்ந்து வாழ்வைக் கழிக்க அவரையும் எரிக்கிறாய்.

காடு மலை எங்கும் பரவி எரித்தாலும் தெய்வம் முன்

அடக்கம் காப்பதால் நீ அதிகம் பேசியது ஆத்திகம்.

ஒருத்தியின் பிரச்சனைக்கு உன்னை அழைத்தாள் கண்ணகி அவள்;

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்த நீ கண்ணகியின் ஏவல்,

பகுத்தறியாமல் ஊரையே பற்ற வைக்க உனக்கேன் அவ்வளவு ஆவல்?

Leave a comment